திருப்பூர் - ஊத்துக்குளி தண்டவாளத்தில் மீண்டும் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு

திருப்பூர் - ஊத்துக்குளி தண்டவாளத்தில் மீண்டும் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு
Updated on
1 min read

திருப்பூர் - ஊத்துக்குளி தண்ட வாளத்தில் திடீரென நேற்று ஏற் பட்ட விரிசலால், எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருப்பூர் கூலிபாளையம் ரயில் நிலையம் அருகே ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, பலத்த சத்தம் கேட்டபோது, அவசர கால பிரேக்கை பயன்படுத்தி, ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார். தண்டவாளப் பகுதியில் ஆய்வு செய்தபோது, விரிசல் ஏற்பட்டிருப் பதைக் கண்டு அதிர்ச்சியடைந் துள்ளார்.

இதுகுறித்து, திருப்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் அளித் துள்ளார். விரிசல் ஏற்பட்ட பகு தியை, ரயில்வே பணியாளர்கள் தற்காலிகமாக சரி செய்தனர்.

இதுதொடர்பாக ரயில் பயணி ஒருவர் கூறும்போது, “திருப்பூர் ஊத்துக்குளி ரயில் நிலையப் பகுதியில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 2 இடங்களில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட் டது. கடந்த வாரம் மனநலம் பாதிக் கப்பட்ட ஒருவர் ஜல்லிக் கற்களை வைத்து நின்றதால், ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தில் இறங்கி அவரை அப்புறப்படுத்தினார்.

இதற்கிடையே தண்ட வாளத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெறாத வண்ணம், ரயில்வே போலீ ஸார், ஊழியர்கள் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும்” என்றார்.

திருப்பூர் ரயில்வே துறையினர் கூறும்போது, “தண்டவாளத்தில் விரிசல் என்பது குளிர்காலத்தில் தொடர்ச்சியாக நடக்கும் விஷயம் தான். அப்பகுதியில் மட்டும், அனைத்து ரயில்களும் 30 கி.மீ. வேகத்தில் செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது. விரிசல் ஏற்பட்ட பகுதியை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in