

பாஜக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கீழமணக்குடியில் கருப்பு கொடி மற்றும் செருப்புகளை கட்டி தொங்கவிட்டிருந்தனர்.
கன்னியாகுமரி அருகே கோவளத்தில் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால், இத்திட்டம் குமரி மாவட்டத்துக்கு வராது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆனாலும், துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கீழமணக்குடியில் மீனவர்கள் கரைப்பகுதியிலும், கடலுக்குள்ளும் போராட்டம் நடத்தினர்.
தேர்தலுக்கு வாக்குசேகரிக்க வரும் வேட்பாளர்கள் துறைமுகத்திட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்தால் மட்டுமே, மணக்குடி மற்றும் சுற்றுப்புற மீனவ கிராமங்களில் வாக்குகேட்க அனுமதித்து வருகின்றனர். கீழமணக்குடி மீனவ கிராமத்தில் சாலையோரம் மற்றும் சாலையின் குறுக்காக நேற்றுகருப்புகொடிகளையும், செருப்புகளையும் கட்டி தோரணமாக தொங்கவிட்டிருந்தனர். சரக்கு பெட்டக துறைமுக திட்டம் மற்றும் பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் இவ்வாறு செய்திருந்தனர்.