Published : 01 Apr 2021 03:16 AM
Last Updated : 01 Apr 2021 03:16 AM

மு.க.ஸ்டாலின் ஆதரவு அலை வீசுவதால் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும்: திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உறுதி

கே.என்.நேரு

திருச்சி

மக்களிடத்தில் மு.க.ஸ்டாலின் ஆதரவு அலை வீசுவதால் திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதி களிலும் திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ‘இந்து தமிழ்’ நாளித ழுக்கு நேற்று அளித்த பேட்டி:

அதிமுக ஆட்சி மீது மக்களிடம் கடும் வெறுப்பு நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக திருச்சியில் எவ்வித வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. எனவே, திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் வாக்கா ளர்கள் உறுதியாக உள்ளனர். மாநிலம் முழுக்க மு.க.ஸ்டாலி னுக்கு ஆதரவாக அலை வீசுவதால் இத்தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி கிடைக்கும். இப்போதுள்ள களச்சூழலைப் பார்த்தால், திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

சதிச் செயல் எடுபடாது

மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்ட அதிமுகவினர், வேறுவழி யின்றி சில அதிகாரிகளின் துணை யுடன் திட்டமிட்டு சதி செய்து எங்களைப் பற்றி தவறான தகவல் களை பரப்பவும், தேர்தலை நிறுத் தவும் முயற்சி செய்கின்றனர்.

ஆனால் எதுவும் எடுபடப் போவதில்லை. தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொள்ளும் என நம்புகிறோம். காவல் நிலையங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மக்களிடம் நம்பிக்கை அதிகரிப்பு

நான் போட்டியிடும் திருச்சி மேற்கு தொகுதி மட்டுமின்றி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிக ளிலுள்ள மக்களிடமும் என் மீதான அன்பும், நம்பிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை பிரச்சாரத்துக்கு செல்லுமிடங்களில் நேரடியாக உணர முடிகிறது. நிச்சயமாக, இவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் எங்களது செயல்பாடுகள் இருக்கும்.

தயார் நிலையில் திட்டங்கள்

திமுக ஆட்சிக்கு வந்தவு டன், திருச்சி மாநகரின் வளர்ச் சிக்காக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மக்கள் பயன்படுத்தும் வகையில் உய்யக் கொண்டான் வாய்க்கால் சீரமைப்பு, மிகப் பெரிய நூலகம், கோணக்கரை சாலை விரிவாக்கம், குடமுருட்டி- ரங்கம் இடையே காவிரியில் புதிய பாலம், நீதிமன்றம் அருகிலிருந்து உய்யக்கொண்டான் கரையில் அல்லித்துறை வரை புதிய சாலை, நீர்மட்டத்தை உயர்த்த குளங்கள், ஏரிகள் சீரமைப்பு என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்த தயாராக வைத்துள்ளோம். இதன் மூலம் சென்னைக்கு அடுத்த சிறந்த மாநகராக்குவோம்.

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்புக்கான வாய்ப் புகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. துறையூர், முசிறியில் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள், சிப்காட் தொடங்கப்படும். லால்குடி, மணப் பாறையில் அரசு கலைக் கல்லூரி, புள்ளம்பாடியில் பாலி டெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். கிராமப் புற மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகரிக்கப்படும். திருச்சியில் எய்ம்ஸ்க்கு நிகரான அரசு மருத்து வமனை அமைக் கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x