

திமுக தேர்தல் அறிக்கையில் கலப்பு திருமண உதவித் தொகை வழங்குவதாக அறிவிக்கப் பட்டுள்ளது குறித்து அக்கட்சி வேட்பாளர்களிடம் விளக்கம் கேட்டு பாமகவினர் நேற்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேவலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமசந்திராபுரம் கிராமத் தில் குடியாத்தம் தொகுதி திமுகவேட்பாளர் அமலு விஜயன் தனதுகூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று காலை வாக்கு சேகரிக்கவந்தார். அப்போது, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வில்வநாதன் தனது ஆதரவாளர்களுடன் அமலு விஜயனுக்கு ஆதரவாக அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அப்பகுதியில் வசிக்கும் பட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சில இளைஞர்கள், பெண்கள், திமுக வேட்பாளர்களிடம் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கலப்பு திருமணத்துக்கு ஊக்கத் தொகை வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது, இரு தரப்பினருக் கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு கட்சியினரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி மோதல் உருவாகும் நிலைக்கு சென்றனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த உமராபாத் காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் களை கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர். இதை யறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென சாலையில் அமர்ந்து, கைது செய்து அழைத்துசெல்லப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் வாக்கு சேகரிக்க செல்ல முடியாமல் திமுக வேட் பாளர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை காவலர்கள் சமாதானம் செய்து அழைத்துச்சென்றனர். அதன் பிறகே திமுக வேட்பாளர்கள் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.