

காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்காதவர்கள் எப்படி மத்திய அரசிடம் பேசி ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை இலவrமாக கொடுப்பார்கள் என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பி யுள்ளார்.
ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகனுக்கு ஆதரவாக தி.மலை தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள்அமைச்சருமான எ.வ.வேலு நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசும்போது, ‘‘இங்குபோட்டியிடும் அதிமுக அமைச்சர் வாய் திறந்து பேசுவதில்லை. இவரால் தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த எனக்குத்தான் அவமானமாக இருக்கிறது. மற்ற அமைச்சர்களிடம் பேசி எந்த திட்டத்தையும் வாங்கிவரவில்லை.
திமுக ஆட்சியில் குடும்ப அட்டைகளுக்கு 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. இப்போது அதை முறையாக வழங்குவதில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் 450 ரூபாயாக இருந்த காஸ் சிலிண்டர் தற்போது 950 ரூபாயாக உயர்ந்துள்ளது. இவர்கள் எப்படி ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை இலவசமாக தருவார்கள். இவர்களால் வழங்கமுடியாது.
மத்திய அரசுதான் சிலிண்டரை வழங்க முடியும். காஸ் சிலிண்டர் விலை உயரும்போ தெல்லாம் கண்டனம் தெரிவிக்காத இந்த அரசாங்கம், எப்படி மத்திய அரசிடம் பேசி சிலிண்டரை வாங்கிக் கொடுப்பார்கள். மக்கள் யோசிக்க வேண்டும்.
நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்’’ என்றார்.