சாலை விபத்தில் சிக்கிய இளைஞருக்கு முதலுதவி அளித்த புதுச்சேரி ஆளுநர்

விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளித்த தமிழிசை.
விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளித்த தமிழிசை.
Updated on
1 min read

சாலை விபத்தில் சிக்கி, ரத்த காயத்துடன் இருந்த இளைஞருக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் வழியில், திண்டிவனம் - சென்னை ஹைவே சாலையில் படாளம் கூட்டு ரோடு அரு‌கே இன்று (மார்ச் 31) இளைஞருக்கு விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் காணப்பட்டார். அப்போது அவ்வழியாகச் சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, அந்த இளைஞருக்கு உடனே முதலுதவி அளித்து தனது பாதுகாப்பு வாகனத்தில் காவலர் ஒருவருடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மருத்துவரைத் தொடர்பு கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். விபத்துக்குள்ளான இளைஞருக்கு ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் தகவல் கிடைத்ததாக தமிழிசை தெரிவித்தார்.

மேலும், வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிய வேண்டும், அதிவேகத்தில் செல்வது, தொலைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் பெரும்பாலான விபத்துகளைத் தடுக்கலாம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in