

தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் குன்னம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் கடந்த 26-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஆ.ராசா பேசும்போது, முதல்வர்பழனிசாமியை தரக்குறைவாக பேசியதாக குன்னம் காவல் நிலையத்தில் குன்னம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் புகார் அளித்தார். இதையடுத்து குன்னம் போலீஸார், ஆ.ராசா மீது கலகம் செய்ய தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதிமீறல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல, முதல்வரை அவதூறாகப் பேசியதாக அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர், மீன்சுருட்டி போலீஸாரும், சென்னைமத்திய குற்றப்பிரிவு போலீஸாரும் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.