அருப்புக்கோட்டையில் முரசு சின்னத்தை காண்பித்து விஜயகாந்த் பிரச்சாரம்

அருப்புக்கோட்டை தொகுதி தேமுதிக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து கைகளை அசைத்தும், முரசு சின்ன பதாகையை காண்பித்தும் பிரச்சாரம் செய்த விஜயகாந்த்.
அருப்புக்கோட்டை தொகுதி தேமுதிக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து கைகளை அசைத்தும், முரசு சின்ன பதாகையை காண்பித்தும் பிரச்சாரம் செய்த விஜயகாந்த்.
Updated on
1 min read

அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கையசைத்தும், முரசு சின்னத்தைக் காண்பித்தும் பிரச்சாரம் செய்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதற்கட்டமாக சென்னை, விருத்தாச்சலம் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அவர் உடல்நலக் குறைவால் கைகளை அசைத்தும், முரசு சின்னப் பதாகையை தொண்டர்களிடம் காண்பித்தும் பிரச்சாரம் செய்தார்.

இரண்டாம் கட்டமாக தென் மாவட்டங்களில் நேற்று பிரச் சாரத்தை தொடங்கினார். அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட் பாளர் ரமேஷை ஆதரித்து அருப்புக்கோட்டை மரக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் வேனில் நின்றவாறு பிரச்சாரம் செய்தார். கூட்டத்தைப் பார்த்து கையசைத்தார். பின்னர் கைகளைக் கூப்பி வணங்கினார். முரசு சின்னம் உடைய பதாகையை காண்பித்து வாக்கு சேகரித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in