சொத்து விவரங்களை பொய்யாக குறிப்பிடும் அதிமுக - திமுகவினர்: ஐஜேகே. தலைவர் பாரிவேந்தர் குற்றச்சாட்டு

சொத்து விவரங்களை பொய்யாக குறிப்பிடும் அதிமுக - திமுகவினர்: ஐஜேகே. தலைவர் பாரிவேந்தர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மக்கள் நீதி மய்யம் கட்சிக் கூட்டணியில் நத்தம் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சரண்ராஜை ஆத ரித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பாரிவேந்தர் நத்தம் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஊழல் புகார்களைக் கூறுகின்றனர். சொத்து மதிப்பைக் குறிப்பிடும்போது ஸ்டாலினுக்கு கார் இல்லை என்கிறார். முதல்வர் பழனிசாமி சொத்து விவரம் குறித்து பொய் சொல்கிறார். ஆனால், கமல்ஹாசன் ரூ.170 கோடி சொத்து உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்திடமே சொத்து விவரம் குறித்து பொய் சொல்பவர்கள், மக்களிடம் எப்படி பொய் சொல்லாமல் இருப்பார்கள் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in