வணிக வளாக நிர்வாகிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை: கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு

வணிக வளாக நிர்வாகிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை: கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு
Updated on
1 min read

வணிக வளாகங்கள், நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகிகளுடன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் டி.கே.ராஜேந்திரன் கூறியதாவது: சென்னை மாநகரில் பெரும்பாலான பொதுமக்கள் பொருட்கள் வாங்கவும், திரைப்படங்கள் பார்க்கவும் வணிக வளாகங்களுக்கே வருகின்றனர். பல முக்கிய நிகழ்ச்சிகள் நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படுகின்றன. எனவே இங்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக நீங்கள் சில முன்னேற்பாடு நடவடிக்கைகளை கண்டிப்பாக செய்தாக வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு அவற்றை ஒருங்கிணைத்து கட்டுப்பாட்டு அறை வைத்து, தகுதியான ஆட்களை நியமித்து அவற்றை கண்காணிக்க வேண்டும்.

ஸ்கேனர் கருவிகள்

வளாகத்துக்குள் வரும் வாக னங்களை தீவிரமாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும். வாடிக் கையாளர்களின் உடைமைகளை சோதிக்க ஸ்கேனர் கருவிகளை கொண்டு சோதித்த பின்னரே உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். சந்தேகப் படும்படி ஏதாவது பொருட்கள் கிடந்தாலோ அல்லது மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்தாலோ அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடி யாக தகவல் தெரிவிக்க வேண் டும். வணிக வளாகங்கள், நட்சத்திர ஓட்டல்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் நேரில் வந்து சோதனை செய்வர் என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் ஆணையாளர்கள் ஆபாஷ்குமார், ரவிக்குமார், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர், இணை ஆணையர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in