சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இன்று முதல் மத்திய படை பாதுகாப்பு: அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இன்று முதல் மத்திய படை பாதுகாப்பு: அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதி
Updated on
1 min read

உயர் நீதிமன்றத்துக்கு இன்று முதல் மத்திய தொழிலக பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இனி அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) பாதுகாப்பு அளிக்க தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல் உத்தரவிட்டார். தீபாவளி விடுமுறை முடிந்து 16-ம் தேதி (இன்று) நீதிமன்றம் திறக்கும்போது இப்பாதுகாப்பு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவில் நீதிபதி தெரிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக, உயர் நீதிமன்ற கட்டிடங்கள் மற்ற நீதிமன்ற கட்டிடங்களில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. இதற்காக பல அடி தூரத்துக்கு தகரத்தால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப் பணிக்காக சுமார் 450 வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் நேற்றுமுன்தினம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இதை பார்வையிட்ட சிஐஎஸ்எப் படையின் தென் மண்டல ஐ.ஜி. வினய்தோஷ் மிஸ்ரா பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 16-ம் தேதி முதல் (இன்று) மத்திய தொழிலக பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. இது விமான நிலையங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு இணையானது. எனவே அங்குள்ள நடைமுறையை இங்கும் பின்பற்று வோம். உயர் நீதிமன்ற கட்டிடங் களுக்கு 24 மணி நேரமும் பாது காப்பு அளிக்கப்படும். உயர் நீதிமன்றத்துக்குள் நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே வாகனங்களுடன் வர அனுமதிக் கப்படுவர். வழக்கறிஞர் உள்ளிட்ட மற்றவர்களின் வாகனங்கள் நீதிமன் றத்துக்கு வெளியே நிறுத்திவிட்டுத் தான் வர வேண்டும். இதற்காக அவர்களுக்கு தனித்தனியாக இடங் கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் உள்ளே வருவதற்கு 3 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மேலும் 2 நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். இந்த நுழைவு வாயில்களில் ஆண், பெண்களுக்கென தனித்தனி மெட்டல் டிடெக்டர் கருவிகள் வைக் கப்பட்டுள்ளன. அதன் அருகே ஸ்கேனர் கருவிகள் பொருத்தப்பட் டுள்ளன. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப் படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

உயர் நீதிமன்றத்துக்குள் நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே வாகனங்களுடன் வர அனுமதிக்கப்படுவர். வழக்கறிஞர் உள்ளிட்ட மற்றவர்களின் வாகனங்கள் நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்திவிட்டுத்தான் வர வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in