நிதித்துறை செயலர் உட்பட அரசு உயர் அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்குகள் முடித்து வைப்பு

நிதித்துறை செயலர் உட்பட அரசு உயர் அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்குகள் முடித்து வைப்பு
Updated on
2 min read

நிதித்துறைச் செயலர், நகராட்சி நிர்வாக ஆணையர் உட்பட பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கலான மனுக்களை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

சிவகங்கை மாவட்டம், தஞ்சா கூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். ஒக்கூரைச் சேர்ந்தவர் சந்திரன். இவர்கள் வனத்துறையில் முறையே 23, 29 ஆண்டுகள் பணிபு ரிந்து 2010-ல் ஓய்வு பெற்றனர்.

இவர்கள் தங்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இவர் களின் தற்காலிக பணிக் காலத்தில் 50 சதவீத பணிக் காலத்தையும் சேர்த்து பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க 25.1.2014-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.

இதனால் நிதித் துறை செயலர் கே.சண்முகம், முதன்மை தலைமை வன பாதுகாவலர் வினோத்குமார், சிவகங்கை மாவட்ட வன அலுவலர் ஆனந்த குமார், முதன்மை கணக்காயர் ஜெனரல் சினேகலதா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு

மதுரை பர்மா நகரைச் சேர்ந்த சுசிலா, இவரது மகன்கள் முருகன், சரவணன், கார்த்திக் ஆகியோர் திட்ட மதிப்பீட்டுத் துறை இயக்குநர் மல்லிகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தனர்.

அதில், ‘தனது கணவர் முத்து இருளாண்டி, பெரியார் வைகை நவீனமயமாக்கல் திட்ட காவல ராகப் பணிபுரிந்தார். அவர் சஸ் பெண்ட் செய்யப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குரிய குறைந்தபட்ச ஓய்வூதியம், இழப்பீடு ஆகியவை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

தனித்தனி மனு

கன்னியாகுமரி மணலிக்கரை யைச் சேர்ந்த பெர்னிஸ்கீதா, நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ், நாகர்கோவில் நக ராட்சி ஆணையர் எஸ்.ராமமூர்த்தி ஆகியோர் மீதும், நெல்லை பாளை. டிவிஎஸ் நகரைச் சேர்ந்த டி.திரவியராஜ் என்பவர், மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கே.மணிவாசன் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இவை அனைத்தும் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன் விசார ணைக்கு வந்தது. அரசு வழக்கறி ஞர் கே.பி.கிருஷ்ணதாஸ் வாதிடும் போது, வனத்துறை ஊழியர் களுக்கு ஓய்வூதிய காலத்துக்கு உட்படாத பணிக் காலத்தில் 50 சதவீதத்தை சேர்த்து ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிற வழக்குகளிலும் நீதிமன்ற உத்தரவுபடி, மனுதாரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட் டுள்ளன என்றார். பின்னர் அந்த உத்தரவு நகல்களையும் தாக்கல் செய்தார்.

அவற்றை ஏற்ற நீதிபதி, இந்த வழக்குகள் அனைத்திலும் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு களை அதிகாரிகள் நிறைவேற்றி யுள்ளனர். எனவே அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதில்லை என்று கூறி மனுக்களை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in