ஆவடி குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி மறியல்: 50 பேர் கைது

ஆவடி குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி மறியல்: 50 பேர் கைது
Updated on
1 min read

குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

கனமழையால் ஆவடி- பருத்திப்பட்டு ஏரி நிரம்பி வழிந்து வருகிறது. ஏரி பகுதிக்கும் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக ளுக்கும் இடையே உள்ள தடுப்புச் சுவர்கள் உடைந் துள்ளதால், ஏரியிலிருந்து வெளியேறிய மழைநீர் குடி யிருப்பு பகுதிகளை சூழ்ந் துள்ளது. கடந்து 10 நாட்களாக இதே நிலை நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை சற்று குறைந்திருந்த நிலையில், நேற்றுமுன்தினம் கொட்டித் தீர்த்த கனமழையால் வீட்டு வசதி வாரிய குடியி ருப்புகளை மீண்டும் அதிகளவு நீர் சூழ்ந்தது. கழிவு நீருடன் கலந்து வருவதால் கடும் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இதையடுத்து நேற்று 75-க்கும் மேற்பட்டோர் ஆவடி புதிய ராணுவ சாலை யில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மழை நீரை அகற்றவும், மழைநீர் இனி குடியிருப்பு பகுதிகளில் புகாத வகையில் உரிய நட வடிக்கையினை ஆவடி நகராட்சி நிர்வாகம் எடுக்கவும் வலியுறுத்தினர். இந்த மறியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த ஆவடி நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் 50 பேரை கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in