

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆழியாறு பகுதியில் அறிவுத் திருக்கோயில் உள்ளது. இதன் நிறுவன தலைவரும் யோகா குருவுமான வேதாத்திரி மகரிஷியின் 15-ம் ஆண்டு வேள்வி தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி ஆன்மிக உலகசாதனை தவம் செய்ய முடிவு செய்யப்பட்டது. கரோனா காலம் என்பதால், இதை ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் (மார்ச் 28) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1.5 லட்சம் பேர் ஆன்மிக உலக சாதனை தவத்தில் பங்கேற்றனர். அப்போது பஞ்சபூதங்கள், நவக்கிரகங்கள் மீது செய்யும் தவத்தால் மனித இனம் பெறும்நன்மைகளும், கரோனா பரவலில் இருந்து காத்துக்கொள்ளும் முறைகளும் விளக்கப்பட்டன. பின்னர், பஞ்சபூத நவக்கிரக தவம் இயற்றப்பட்டது. இந்த 15-வது வேள்விதினத்தில் துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்றனர். l