

புவனகிரி தொகுதிக்கு உட்பட்ட புவனகிரி, சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களில் நேற்று இந்திய ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ரேவதிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
புவனகிரியில் இந்திய ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ரேவதிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து வாக்கு சேகரித்து பேசியது:
அதிமுக, திமுக இரு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வருகிறது. அதிகாரிகளும் திமுக அதிகாரிகள், அதிமுக அதிகாரிகள் என்ற நிலை ஏற்படுகிறது .
பொருளாதாரத்தை உயர்த்த, வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் எங்கள் அணிக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும். இப்போது மூன்றாவது அணியாக இருக்கும் நாங்கள் முதல் அணியாக வந்தால்தான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும், லஞ்சம் லாவண்யம் இல்லாத ஒரு அரசு அமைக்க முடியும். அது மக்களால் தான் முடியும். மக்கள் மாற்றத்தை தர வேண்டும். மக்கள் இலவசங்களை ஏற்கக்கூடாது. வெள்ளாற்றில் தடுப்பணை ஏற்படுத்தப்படும், நவீன அரசு மருத்துவமனை அமைக்கப்படும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து சேத்தியாத்தோப்பு கடைவீதியில் ஆத்தூர் கலைக்குழுவினரிடன் ஆடல் பாடல்களுடன் வாக்கு சேகரித்தனர்.