Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொலைக்கு தேர்தல் மூலம் பொதுமக்கள் நீதி வழங்க வேண்டும்: பெரியகுளத்தில் வைகோ பிரச்சாரம்

பெரியகுளத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

பெரியகுளம்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்டதற்கு தேர்தல் மூலம் நீதி வழங்குங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டார்.

பெரியகுளம் தொகுதி திமுக வேட்பாளர் கேஎஸ்.சரவணக் குமாரை ஆதரித்து வடகரையில் அவர் பேசியதாவது:

தமிழக அரசு ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையில் உள் ளது. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். சமையல் எரிவாயு விலை 3 மாதங்களில் ரூ. 225 உயர்ந்துள்ளது. டீசல், பெட்ரோல் விலையும் உயர்ந்துவிட்டது.

திமுக வெற்றி பெற்றதும் பெரிய குளம் தொகுதியில் வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை உள்ளிட்ட அணைகள் தூர்வாரப் படும். மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும். அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு பொதுப் போக்குவரத்து தொடங்கப் படும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை சரி செய்யப்படும்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்களை சுட்டத்தில் 13 பேர் இறந்தனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்கு நீதிமன்றங்கள் நீதி வழங்கி னாலும் பொதுமக்கள் தேர்தல் மூலம் நீதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x