

காரைக்குடி தொகுதிக்கு பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தயாரித்த தனி தேர்தல் அறிக்கையை நடிகை காயத்திரி ரகுராம் வெளியிட்டார்.
இந்த அறிக்கையில், காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். சட்டக்கல்லூரி கொண்டு வரப்படும். கோட்டையூர் ஸ்ரீராம்நகருக்கு ரயில்வே மேம்பாலம், காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை, செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும். அரசு மருத்துவமனைகளின் தரம் மேம் படுத்தப்படும். தேவகோட்டையில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல் படுத்தப்படும்.
மருது சகோதரர்கள், வீரன் அழகு முத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்படும். இளைஞர்கள் மேம்பாட்டுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழிற் பூங்கா அமைக்கப்படும். சுய சார்பு மாதிரி கிராமங்கள் உருவாக்கப்படும்.
காரைக்குடி - சென்னை இடையே இரவுநேர ரயில் கொண்டு வரப்படும். இயற்கை வேளாண்மை மாதிரி கிராமம் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.