வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் அதிமுக தேர்தல் அறிக்கை மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்

மார்க்கையன்கோட்டையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
மார்க்கையன்கோட்டையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
Updated on
1 min read

வாக்குறுதிகளை நிறைவேற்றி யதால் தற்போதைய அதிமுக தேர்தல் அறிக்கையும் வாக்காளர் களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

துணை முதல்வரும், போடி தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் குச்சனூர், மார்க்கையன்கோட்டை ஆகிய பேரூராட்சிப் பகுதிகள், பூலானந்தபுரம், அம்மாபட்டி, எல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். வழிநெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மார்க்கையன்கோட்டையில் அவர் பேசியதாவது:

போடி தொகுதியில் பல் வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள் தமிழகத்தில் செயல் படுத்தப்பட்டன. பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். குரங் கணி-டாப்ஸ்டேஷனுக்கு 13 கி.மீ. வனப்பகுதியில் சாலை அமைக்க அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலை மாற உள்ளது. வாக்குறுதிகளை ஏற்கெனவே முழுமையாக நிறைவேற்றி உள்ள தால் இம்முறையும் அதிமுக தேர்தல் அறிக்கை வாக்காளர் களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு துணை முதல்வர் பேசினார்.

சின்னமனூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.விமலேஷ், மார்க்கையன்கோட்டை பேரூர் செயலாளர் சி.அகிலன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in