Published : 20 Nov 2015 08:43 AM
Last Updated : 20 Nov 2015 08:43 AM

மேற்குதொடர்ச்சி மலையில் கனமழை: நெல்லை அருகே 30 கிராமங்கள் துண்டிப்பு - கோவில்பட்டியில் பாலம் உடைந்தது

மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்துவரும் கன மழை காரணமாக, இவ்விரு மாவட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை அருகே காட்டாற்று வெள்ளத்தால் 30 கிரா மங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இம்மூன்று மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வரு கிறது. நேற்றும் மழை கொட்டியது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய் யும் மழை காரணமாக காட்டாறு களில் வெள்ளம் பெருக்கெடுத் துள்ளது.

திருநெல்வேலி அருகே காட் டாற்று வெள்ளத்தால் தாழையூத்து- வடகரை இடையே அமைந்துள்ள தரைப்பாலம் நேற்று வெள்ளத்தில் மூழ்கியது. வடகரை, வேப்பங்குளம் உள்ளிட்ட 30 கிராமங்கள் துண் டிக்கப்பட்டுள்ளன. கடனா அணை, கருப்பாநதி அணை, ராமநதி அணை, அடவிநயினார்கோவில் அணைகள் நிரம்பியுள்ளதால், வெளியேறும் நீர் தாமிரபரணியில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கடம் பூர், கயத்தாறு பகுதிகளில் குடியிருப் புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோவில்பட்டி- ஊத்துப்பட்டி சாலை யில் உள்ள காட்டாற்று ஓடையின் குறுக்கேயுள்ள தரைப்பாலம் அடித் துச் செல்லப்பட்டது. இதனால் 10 கிராமங்கள் துண்டிக்கப்பட் டுள்ளன. கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, நாலாட்டின் புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 6 வீடுகள் முழுமையாகவும், 74 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணைகளில் நீர் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக அங்குள்ள பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து 2,000 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகங் கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x