

விழுப்புரம், செஞ்சி, திருவண்ணாமலை தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதிமய்ய வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை செஞ்சியில் ஜூம் ஆப் மூலம் பிரச்சாரம் செய்து பேசியது.
நேர்மை என்று பேசினால் இந்த நாளில் எது எங்கே கிடைக்கும். நீங்கள் இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தீர்களே, உங்களுக்கு யார் பிரியாணி கொடுத்து உட்கார வைத்தது. தமிழகம் சீரமைய வேண்டும் என்று களத்தில் காத்திருந்தீர்கள்.
உங்களை மதிக்காமல் அசட்டையாக போய் விட்டேன் என்று மட்டும் நினைக்காதீர்கள். நேரம் நம்மை இயக்குகிறது. புதுச்சேரியில் இருந்து கிளம்ப முடியாமல் 144 தடை இருந்தது. காந்தியார் காலம் முதல் 144 தடை என்ன வென்று பார்த்து வருகிறேன். நான் மீண்டும் வருகிறேன்.
செஞ்சிக்கோட்டையை சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இவர்கள் வெற்றிபெற்றால் அவருக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு அதை எதற்கு செலவு செய்தார் என்பதை நீங்களே பார்க்கலாம்.
அனைத்து நடவடிக்கையும் வெளிப்படையாக இருக்கும். தகவல் அறியும் சட்டத்தில் தெரிந்து கொள்ளலாம். இல்லத்தரசிகளுக்கான எங்கள் திட்டத்தை எவ்வளவு நல்ல திட்டமாக இருந்தாலும் அதைக் கொஞ்சம் வெட்கமே இல்லாமல் காப்பி அடித்துவிட்டனர்.
அவர்கள் காப்பி அடித்து விட்டார்கள் என்ற பயம் இல்லை. அவர்கள் எதை அறிவித்தாலும் செயல்படுத்த மாட்டார்கள். நான் மறுபடியும் செஞ்சிக்கு வருகிறேன். மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு தந்தால் அது என்னை தலைமை பதவிக்கு உயர்த்தும், . நாளை நமதாகும். இவ்வாறு கமல் பேசினார்.
புதுச்சேரியில் 4.30 மணிக்கு பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட கமல் நினைத்து இருந்தால் கார் மூலம் 70 கிமி தூரத்தில் உள்ள செஞ்சிக்கு வந்து இருக்கமுடியும். ஆனால் கூட்டம் குறைவாக இருந்ததால் ஜூம் ஆப் மூலம் பேசினாரோ என்ற சந்தேகம் எழுகிறது என்று அவரது கட்சி நிர்வாகள் வருத்தமாய் தெரிவித்தனர்.