

போரூர் ஏரியின் மேம்பாலத்தில் மேல் இருந்து தண்ணீர் நிரம்பி உள்ள போரூர் ஏரியில் நேற்று காலை ஒருவர் குதித்தார்.
அப்போது ஏரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போரூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கோதண்டம் உடனே நீரில் குதித்து நீந்தி சென்று ஏரியில் குதித்தவரை மீட்டு கரையோரம் பிடித்து வைத்திருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏரியில் குதித்தவரை, ஏரியின் முகப்பு பகுதி கரைக்கு கொண்டு வந்தனர்.
அவரிடம் நடத்திய விசா ரணையில், இவர் போரூர் அருகே உள்ள பட்டுமாங்காடு, சார்லஸ் நகரைச் சேர்ந்த கட்டுமான தொழி லாளி சதீஷ்குமார் (41). குடும்ப பிரச்சினை காரணமாக தற் கொலைக்கு முயன்றுள்ளது தெரிய வந்தது. தற்கொலைக்கு முயன்ற வரை தன் உயிரையும் துச்சமாக மதித்து துணிச்சலுடன் நீரில் குதித்து காப்பாற்றிய சிறப்பு எஸ்ஐ கோதண்டத்தை பலரும் பாராட்டினர்.