

பெண்களை பற்றி எந்த மதிப்பும், மரியாதையும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியாதவது,
” கொச்சையாக பேசும் ஆ. ராசவை இதுவரை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க கூட இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது பெண்களை பற்றி எந்த மதிப்பும், மரியாதையும் ஸ்டாலினுக்கு கிடையாது.
பாமகவில் இவ்வாறு யாரவது பேசி இருந்தால் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீங்கியதுடன், உதைத்து அனுப்பி இருப்போம்” என்று பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீடு செய்து ஆ. ராசா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சை பாமக நிறுவனர் ராமதாஸும் கண்டித்தார். ஆ.ராசா, லியோனி இருவரது பேச்சும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், திமுக கண்ணியக் குறைவாகப் பேசுவதை அனுமதிக்காது என ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல்வரின் அம்மாவைப் பற்றிப் பேசியது தவறாகக் கொண்டு செல்லப்படுவதால் வருத்தம் தெரிவிக்கிறேன், முதல்வர் கண்கலங்கியதைப் பார்த்தேன், அதற்காக முதல்வரிடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் என ஆ.ராசா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.