அதிமுகவும் பாஜகவும் தோற்கடிக்கப்பட வேண்டும்: நல்லகண்ணு பேச்சு

மா.சுப்பிரமணியத்துக்கு ஆதரவாக இரா.நல்லகண்ணு பிரச்சாரம்.
மா.சுப்பிரமணியத்துக்கு ஆதரவாக இரா.நல்லகண்ணு பிரச்சாரம்.
Updated on
1 min read

அதிமுக - பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தோற்கடிக்கப்பட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து நேற்று (மார்ச் 28) மாலை 6 மணியளவில் சைதாப்பேட்டை குயவர் வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு பேசியதாவது:

"10 ஆண்டுகளாகத் தமிழகத்தைப் பாழ்படுத்தியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. அந்த 10 ஆண்டுகளாக ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது தேர்தல் அறிக்கை விட்டிருக்கிறார், என்னனென்ன செய்வோம் என்று. 10 ஆண்டுகளாகச் செய்ய முடியாதவற்றை இனிமேல் செய்வார் என்று நம்ப முடியாது. இனிமேல் செய்வோம் என்றால் எப்படி நம்புவது?

ஆகையால்தான் அதிமுக - பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. எங்கள் கூட்டணி கொள்கைக் கூட்டணி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. எங்களுக்கென்று கொள்கை இருக்கிறது. எங்களுடைய தேர்தல் அறிக்கையில் மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவற்றையும் நாங்கள் செயல்படுத்துவோம்".

இவ்வாறு நல்லகண்ணு பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in