Published : 04 Nov 2015 08:11 AM
Last Updated : 04 Nov 2015 08:11 AM

வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாமக 50% வாக்குகள் பெறும்: நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், 50 சதவீத வாக்குகளை பெற்று பாமக வெற்றி பெறும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மதுர வாயல் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட அயப்பாக்கத்தில், ’புதிய தோர் தமிழகம் செய்வோம்’ என்ற தலைப்பில் பாமக சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் பாமக 4 சதவீத வாக்குகள் தான் பெற்றது என்கிறார்கள். 1989-ல் கட்சி ஆரம்பித்த 4 மாதங் களில் 6.5 சதவீத வாக்குகள் பெற் றோம். கூட்டணி சேராமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டிருந்தால் 40 முதல் 45 சதவீத வாக்குகள் வரை பெற்றிருப்போம்.

வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக 20 சதவீத வாக்குகளும், அதிமுக 20 சதவீத வாக்குகளும் பெறும். பாமக 50 சதவீத வாக்கு களை பெற்று வெற்றி பெறும்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் அவரது அண்ணி இளவரசியும் வேளச்சேரியில் உள்ள 11 தியேட்டர் உரிமை யாளரை மிரட்டி விலைக்கு வாங்கி யுள்ளனர். அதேபோல், அமைந்த கரையில் உள்ள 7 தியேட் டர்களையும் மிரட்டி வாங்கியிருக்கி றார்கள். 1991-96 மற்றும் 2001-06 வரை செய்த ஊழல்களை விட தற்போது 100 மடங்கு ஊழல்களை ஜெயலலிதா செய்திருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி, மாநில தேர்தல் பணிக் குழு தலைவர் பு.தா.இளங் கோவன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் டில்லிபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x