

மதுராந்தகம் ஏரியின் உபரிநீர், கிளியாற்றில் வெளியேறி வருவதால் வெள்ளப் பாதிப்புகளை பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக புதிய தொலைபேசி எண்களை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின், தெற்கு பகுதியில் அமைந்துள்ள மதுராந்தகம் பெரிய ஏரிக்கு, கனமழையினால் நீர்வரத்து அதிகரித்து அதன் முழுகொள்ளளவான 23.3 கனஅடியை நேற்று தாண்டியது. அதனால், 110 கலங்கல்களின் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும், நீரின் உச்சகட்ட அளவான 24 அடியை நீர்மட்டம் நெருங்கி வருகிறது. இதனால், உபரிநீர் வெளியேறும் கிளியாற்றின் இரு புறங்களின் கரைப்பகுதிகளில் வசிக்கும் 9 கிராமங்களுக்கு வருவாய்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் 11 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும், கனமழை யினால் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாது காப்பு கருதி உபரிநீர் எந்நேரமும் திறந்து விடப்படலாம் என, பொதுப்பணித்துறை யினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியதாவது: மதுராந் தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இரவுக்குள் அதிகபட்ச கொள்ளளவை தாண்டும். கிளியாற்றின் கரையில் உள்ள 9 கிராமங்களின் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், கிளாயாற்றில் 10 அடி உயரத்துக்கு தண் ணீர் சென்றால் மட்டுமே பாதிப்பு இருக்கும் என்பதால், தேவையான பாதுகாப்பு பணிகளை வருவாய்துறையினர் மேற் கொண்டு வருகின்றனர். அதனால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேலும், பொதுமக்கள் அனைவரும் ஒத்து ழைப்பு அளிக்க வேண்டுகிறேன் என்றார்.
தொலைபேசி எண்கள்
இதனிடையே வெள்ள பாதிப்பு குறித்து தகவல் தெரிவிப்பதற்காக பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக 044-27237107 மற்றும் 044-27237207 என்ற அவசரகால தொலைபேசி எண்களை ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.