இறந்த ஆதரவற்றவர் உடலை அடக்கம் செய்த ம.நீ.ம வேட்பாளர்

காரைக்குடி ஆறுமுக நகர் மயானத்தில் இறந்த ஆதரவற்றவரின் உடலை அடக்கம் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார்.
காரைக்குடி ஆறுமுக நகர் மயானத்தில் இறந்த ஆதரவற்றவரின் உடலை அடக்கம் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் தனது பிரச்சாரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு இறந்த ஆதரவற்றவர் உடலை அடக்கம் செய்தார். இவரது மனிதநேயத்தைப் பலரும் பாராட்டினர்.

தமிழக மக்கள் மன்றத் தலைவரான ராஜ்குமார் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார். மேலும் தனது அமைப்பு மூலம் மாநிலம் முழுவதும் ஆதரவற்ற நிலையில் இறந்த 125 உடல்களை அடக்கம் செய்துள்ளார்.

இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். வாக்குப் பதிவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற ஒருவர் இறந்து கிடப்பதாக ராஜ்குமாருக்கு தகவல் கிடைத்தது. ஆதரவாளர்களுடன் அங்கு சென்ற அவர், ஆதரவற்றவரின் உடலுக்கு முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து, மயானத்தில் அடக்கம் செய்தார். இவரது மனிதநேயத்தைப் பலரும் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in