Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது; அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயகத்தை பாஜக அழித்துவிட்டது: சேலத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதுடன் ஜனநாயகத்தையும் பாஜக அழித்து விட்டதாக சேலம் பிரச்சாரக் கூட்டத் தில் ராகுல் காந்தி பேசினார். தேசிய அளவில் பொறுப்பேற்குமாறு ராகு லுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் அழைப்பு விடுத்தார்.

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில், ராகுல் காந்தி பேசியதாவது:

கரோனாவிடம் எச்சரிக்கையாக இருக்க முகக்கவசம் அவசிய மானது. அதேநேரம் அதிமுக அணிந்திருக்கும் முகக்கவசத்தைக் கழற்றிப் பார்த்தால், உண்மையில் இருப்பது பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் தான். பழைய அதிமுக இப்போது இல்லை, அது செத்துவிட்டது. இப்போது, அதிமுக என்பது பாஜக, ஆர்எஸ்எஸ்-ன் முழு அமைப்பாக மாறிவிட்டது. இதனை தமிழக மக் கள் புரிந்து கொள்ள வேண்டும், எச் சரிக்கையாக இருக்க வேண்டும்.

உங்கள் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் போல இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் பாஜக சேதப் படுத்தி ஜனநாயகத்தை அழித்து விட்டார்கள். அரசின் பல்வேறு அமைப்புகள் அழிக்கப்பட்டு விட்டன. இதனை பிரதமரின் ஒரு சில நண்பர்களுக்காக செய் கின்றனர். அவர்களின் நோக்கம் பணம் மட்டும்தான்.

தமிழகம் இந்தியாவின் முக்கிய தொழில் உற்பத்தி தலைநகரமாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் தமிழக தொழில்துறையும், அதனைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கானவர் களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால், அதைப் பற்றி பிரதமரிடம், தமிழக முதல்வர் எதுவும் பேசுவதில்லை.

விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்கள் நிறைவேற முதல்வர் ஆதரவு கொடுத்துள்ளார். புதிய கல்விக் கொள்கையின் மூலம் தமிழ்மொழி, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை சேதப் படுத்தும் திட்டம் உள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பதற்கு முதல்வர் முன்வரவில்லை.

ஆனால், மோடியும் அமித் ஷாவும் தமிழகத்தில் எதை வேண்டு மானாலும் செய்து கொள்வதற்கு தமிழக முதல்வர் அனுமதிக்கிறார். தமிழ் மொழி, கலாச்சாரம், பாரம் பரியம் ஆகியவற்றின் மீதான தாக் குதல்தான் அவர்களின் அடிப்படை மனநிலையாக இருக்கிறது. இதை வாக்காளர்களும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஸ்டாலினை தமிழக மக்கள் முதல்வராக்குவதற்கு முடிவு செய்துவிட்டார்கள். ஆர்எஸ்எஸ், பாஜக-வை தமிழகத்தில் தடுத்துவிட்டதால், அவர்கள் இங்கே நுழைய மாட்டார்கள் என்று எண்ண வேண்டாம். அவர்களிடம் கணக் கிட முடியாத அளவுக்கு பணம், அதிகாரம் உள்ளிட்டவை இருக் கின்றன. அதனால், அவர்கள் மீண்டும் மீண்டும் தமிழகத்தில் நுழைய முயற்சிப்பார்கள். எனவே, அவர்களை தமிழகத்தில் தடுப்பதோடு மட்டுமல்ல, டெல்லியில் இருந்தும் அவர்களை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ராகுலுக்கு அழைப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அடிபணிந்து முதல்வர் பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். சட்டப் பேரவைத் தேர்தல் தமிழர்களின் சுயமரியாதையும் உரிமையையும் மீட்டெடுக்கும் தேர்தலாக இருக்க வேண்டும்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமையை தட்டிக் கேட்காத அதிமுக அரசால் காவிரி பாழ்பட்டு கிடக்கிறது. மத்திய அரசு பள்ளிகளில் தமிழ் பேசக்கூடாது என்ற கலாச்சார தாக்குதலையும் மத்திய அரசு நடத்தி கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் பாஜக வேர் ஊன்ற முடியாததால், அதிமுக-வை அச்சுறுத்தி அதன் நிழலில் பாஜக பயணம் செய்து வருகிறது.

மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கமாக இருந்தால், தமிழகத் துக்கு தேவையான நிதியை பெற்று கொள்ள முடியும் என முதல்வர் பழனிசாமி பொய் உரைத்து வருகிறார். தமிழகத்தில் வர்தா புயல் தாக்குதலுக்கு மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதி ரூ.22,573 கோடி, கிடைத்ததோ ரூ.266 கோடி. ஓகி புயல் பாதிப்புக்கு கேட்ட நிதி ரூ.9,302 கோடி, கிடைத்ததோ ரூ.133 கோடி. கஜா புயல் பாதிப்புக்கு கேட்ட நிதி ரூ.17,899 கோடி, கிடைத்ததோ ரூ.1,148 கோடி. புயல் மற்றும் ஜிஎஸ்டி நிதி, கரோனா தொற்று பாதிப்பு நிதி என தமிழகத்துக்கு கேட்ட நிதியை அளிக்காத மத்திய அரசுடன் எதற்கு அதிமுக கூட்டணி வைத்துள்ளது.

மத்தியில் ஆளும் மதவாத, பாசிச கும்பலிடம் சிக்கியுள்ள மக்களை மீட்க வேண்டும். பாஜக ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் ஒட்டுமொத்தமாக பெற்ற வாக்கு 37 சதவீதம்தான். பாஜக-வுக்கு எதிராக 63 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். எனவே, பாஜக ஆட்சிக்கு எதிராக உள்ள அனைத்து கட்சியினரையும் ஒன்று திரட்டி தேசிய அளவில் ராகுல் காந்தி பொறுப்பேற்று வழி நடத்த வேண்டும். இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப் பாளர் தினேஷ் குண்டுராவ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x