Published : 26 Nov 2015 09:44 AM
Last Updated : 26 Nov 2015 09:44 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பஞ்சவடி கோயில் டிரஸ்ட் சார்பில் 20 ஆயிரம் கிலோ அரிசி உதவி

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 20 ஆயிரம் கிலோ அரிசி, பஞ்சவடி கோயில் டிரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது.

திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இதை நிர்வகித்துவரும் பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் சார்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 ஆயிரம் கிலோ அரிசி வழங்கப்பட்டது.

சென்னை அமைந்தகரை, கக்கன் நகர், ரயில்வே காலனி, நல்லமுத்து மாரியம்மன் நகர், காந்தி நகர், வஉசி காலனி, இந்திரா நகர், நமச்சிவாயபுரம், பாரதிபுரம், வெள்ளாளத் தெரு உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அடிப்படையில் அரிசி வழங்கப்பட்டது.

இதை டிரஸ்ட் தலைவரும், அறங்காவலருமான கோதண்டராமன், செயலர் நரசிம்மன், பொருளாளர் கச்சபேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

ஆண்டுதோறும் 300 ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பஞ்சவடி அன்னதானக் கூடத்தில் தினமும் 500 பேருக்கு அறுசுவை உணவு, பஞ்சவடியை சுற்றியுள்ள பகுதிகளில் வாரந்தோறும் இலவச மருத்துவ முகாம், மாதந்தோறும் நீரிழிவு மருத்துவ முகாம் ஆகிய சேவைகளும் இந்த டிரஸ்ட் சார்பில் செய்யப்படுகிறது. 160 பசுக்கள் கொண்ட கோசாலையும் நடத் தப்படுகிறது. நவீன வசதி களுடன் 20 படுக்கை வசதி கொண்ட இலவச மருத்துவமனை 8 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டப் பட்டுவருவது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x