தமிழகத்தில் முன்னேற்றம் தொடர அதிமுக - பாஜகவுக்கு வாக்களியுங்கள்: நடிகை கவுதமி வேண்டுகோள்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் சி.கே.சரஸ்வதியை ஆதரித்து நடிகை கவுதமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் சி.கே.சரஸ்வதியை ஆதரித்து நடிகை கவுதமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
Updated on
1 min read

தமிழகத்தில் முன்னேற்றம் தொடர அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என நடிகை கவுதமி பேசினார்.

மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.கே.சரஸ்வதியை ஆதரித்து, நடிகை கவுதமி பேசியதாவது:

தமிழகம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. எந்த காரணத்தினாலும், இந்தபாதையில் தடை ஏற்படக்கூடாது. நமது அடிப்படைத் தேவைகளை யார் பூர்த்தி செய்வார்கள் என்பதை கணக்கில் கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் முன்னேற்றம் தொடர வேண்டுமானால், அதிமுக ஆட்சி முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடர வேண்டும்.

மொடக்குறிச்சி தொகுதியில் குடிநீர், வேளாண்மை, சுற்றுச் சூழலுக்கு இன்னும் பல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளது. ஒரு குடும்பத்தலைவியின் பாரத்தைக் குறைக்க மாதம் ரூ 1500 உதவித்தொகை, வாஷிங் மெஷின், சூரிய அடுப்பு, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசம் என பல திட்டங்களை முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளார். மத்திய அரசும் பல திட்டங்களை அறிவித்துள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் நல்ல ஆட்சி தொடர வாக்களிக்க வேண்டும்என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in