ஸ்ரீரங்கம் கோயிலில் நவ.18-ல் 2-ம் கட்ட கும்பாபிஷேகம்

ஸ்ரீரங்கம் கோயிலில் நவ.18-ல் 2-ம் கட்ட கும்பாபிஷேகம்
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல் கட்டமாக 43 உப சன்னதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நவம்பர் 23-ம் தேதி 2-ம் கட்ட கும்பாபிஷகத்தை நடத்த இந்துசமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.

இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “டிசம்பர் 22-ம் தேதி கைசிக ஏகாதசி என்பதால் அதற்கு முன்னரே கும்பாபிஷேகத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்தே கும்பாபிஷேக தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி 2-ம் கட்ட கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது” என தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in