

சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் மக்கள் சென்று வருவார்கள். இதனால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே 6-ம் தேதி (இன்று) முதல் தனியார் வாகனங்களில் செல்பவர்கள் தாம் பரம் - பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு மாற்றாக ராஜீவ்காந்தி சாலை (பழைய மகாபலிபுரம் சாலை) வழி யாக துரைப்பாக்கம், கேளம்பாக் கம், திருக்கழுக்குன்றம் பை பாஸ் வழியாக செங்கல்பட்டு - திருச்சி நெடுஞ்சாலையை அடையலாம்.
கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) வழியாக சென்று அக்கரை, முட்டுக்காடு, கோவளம், மகாபலிபுரம் பை பாஸ், கருங்குழி, திருக்கழுக்குன்றம் பை பாஸ் வழியாக செங்கல்பட்டு - திருச்சி நெடுஞ்சாலையை அடையலாம்.
பூந்தமல்லி சாலை வழியாக மதுரவாயல் சந்திப்பு, வேலப்பன் சாவடி, சவிதா பல் மருத்துவக் கல்லூரி, பூந்தமல்லி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழியாக நசரேத் பேட்டை சென்று பூந்தமல்லி சாலை யில் இருந்து புதிதாக போடப்பட் டுள்ள 400 அடி வெளிப்புறச்சாலை வழியாக சென்று வண்டலூர் அருகில் ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.