வளர்ச்சி திட்டங்கள் தொடர ஆதரவு தாருங்கள்: வீடு வீடாக பொன் ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம்  நடைபெற உள்ள மைதானத்தில் முன்னேற்பாடுகளை பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய  இணை அமைச்சர்  கிஷன் ரெட்டி பார்வையிட்டனர்.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தில் முன்னேற்பாடுகளை பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பார்வையிட்டனர்.
Updated on
1 min read

“கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடர ஆதரவளிக்க வேண்டும்” என, பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவில் ஒழுகினசேரி, வடசேரி பகுதி, மீனாட்சிபுரம், செம்மாங்குடி சாலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தியுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்வதற்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக வேட்பாளரான என்னை வெற்றிபெறச் செய்யுங்கள். இதன் மூலம் மக்களின் தேவைகள், பிரச்சினைகள், வளர்ச்சி திட்டங்களுக்காக மக்களவையில் குரல் கொடுத்து நிறைவேற்ற பாடுபடுவேன். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மத்திய அரசு நிதியுதவியுடன் சிறந்த திட்டங்கள் கொண்டுவரப்படும் “ என்றார்.

நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பேசும்போது, “ நாகர்கோவில் தொகுதியில் மத்திய, மாநில அரசின் திட்டமான புத்தன் அணை திட்டப் பணி நடந்து வருகிறது. இத்திட்டம் முழுமை பெறும்போது நாகர்கோவில் நகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நாகர்கோவில் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் வேறு எந்த வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பாஜக வெற்றி பெறுவது உறுதி” என்றார்.

வரும் 2-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வுள்ளார். விவேகானந்தா பாலிடெ க்னிக் கல்லூரி வளாகத்தில் முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை பொன் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர ரெட்டி, கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in