

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளைக் கண்டித்து நேற்று கருப்பு தினம் அனுசரித்தனர். கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள தலைமை தபால் நிலையம், வரு மானவரி அலுவலகம், மத்திய தணிக்கைக் கணக்கு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரை பாண்டியன் கூறியதாவது:
ஏ.கே.மாத்தூர் தலைமையில் மத்திய அரசு நியமித்த 7-வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு 14.33 சதவீதம் ஊதிய உயர்வை வழங்க பரிந் துரைத்துள்ளது.
இதன் மூலம், மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி செலவாகும் என தெரி விக்கப்பட்டுள்ளது. உண்மை யில், இந்த ஊதிய உயர்வால் 30 முதல் 40 கோடி மட்டுமே மத்திய அரசுக்கு செலவாகும்.
வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் மத்திய அரசு கடைநிலை ஊழியருக்கு ரூ.18 ஆயிரம் வழங் கப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளது. ஆனால், நாங்கள் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளையும் ரத்து செய்ய ஊதியக் குழு பரிந்துரைத்துள் ளது. எனவே, 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளைக் கண்டித்து கருப்பு தினம் அனுசரித்தோம். ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபு ரிந்தனர்.
மேலும், எங்கள் கோரிக் கையை மத்திய அரசு நிறைவேற்ற வில்லை எனில் அடுத்தக்கட்டமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு துரைப்பாண்டியன் கூறினார்.