தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர் பாரம்பரியத்தை பிரபலப்படுத்தும் நாம் தமிழர் கட்சி

திருவொற்றியூர் தொகுதியில் பிரச்சாரத்தின்போது சிலம்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்.
திருவொற்றியூர் தொகுதியில் பிரச்சாரத்தின்போது சிலம்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்.
Updated on
1 min read

தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 7 நாட்களே உள்ளன. அதனால் தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களும் காலை, மாலை நேரங்களில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.

மக்களைக் கவர்வதற்காக தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சிகள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். அதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்காக ஓபிஎஸ்., இ.பி.எஸ். போன்ற தலைவர்கள் வரும்போது குறிப்பிட்ட இடத்தில் மக்களைக் கவர்வதற்காக மேடை அமைத்து ஆடல், பாடல் காட்சிகள் அரங்கேறும். ஆண்கள், பெண்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாடல்களை இசைத்து நடனமாடுவார்கள். அதைக் காண்பதற்கு கூட்டம் கூடும். தலைவர்கள் வந்து பேச்சைத் தொடங்கும் வரை ஆடல், பாடல் காட்சிகளைக் காணலாம். அமமுக பிரச்சாரத்தில் சில இடங்களில் இதை காண முடிகிறது.

திமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வருகையின் போது பெரும்பாலும் கட்சியின் கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் கொண்ட பிரச்சாரப் பாடல்களே இடம்பெறுகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் மக்களைக் கவரும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி பிரச்சாரத்தின்போது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் வரை தமிழரின் பராம்பரிய விளையாட்டுக்களை இளம் தலைமுறையினரிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் சிலம்பாட்டம் போன்றவற்றை அரங்கேற்றுகின்றனர். சிறுவர், இளைஞர் என பலரும் இந்த நிகழ்ச்சியை நடத்துவது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தேர்தல் பிரச்சாரத்தில் புதிய யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in