

காஞ்சிபுரம் சதுரங்கபட்டினம் அருகே ஆற்றில் கார் கவிழ்ந்து அதில் பயணம் செய்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர். மேலும் இருவர் படுகாய மடைந்தனர்.
பூந்தமல்லியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலா மாண்டு படித்து வந்தவர் மாதவரம் அலெக்ஸ் நகரைச் சேர்ந்த ஜீவா. இவருடன், தணிகாச்சலம் நகரைச் சேர்ந்த சுந்தர், கொடுங்கையூரைச் சேர்ந்த பேட்ரிக் அஸ்வின், பெரம்பூரைச் சேர்ந்த அஸ்வின், சந்தோஷ்குமார், சந்தோஷ்கர் ஆகியோர் நேற்று முன்தினம் காரில் புதுச்சேரி சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து புறப் பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நேற்று அதி காலை மாமல்லபுரம் தாண்டி வரும் போது கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் கார் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. பின்னர், அங்கிருந்த மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் கார் இரண்டாக உடைந்து நொறுங்கியது. இடிபாடு களில் சிக்கிக் கொண்ட ஜீவா, சுந்தர், பேட்ரிக் அஸ்வின், அஸ்வின் ஆகியோர் படுகாயமடைந்து அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்களின் உடல்கள் செங்கல் பட்டு அரசு பொதுமருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. சந் தோஷ்குமார், சந்தோஷ்கர் ஆகி யோர் படுகாயங்களுடன் செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.