

கோவன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் என்ற அமைப் பினர் மற்றும் மக்கள் கலை இலக் கிய கழகத்தினர் கைது செய்யப் பட்டனர்.
மக்கள் கலை இலக்கிய கழக அமைப்பின் நிறுவனர் கோவன், டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிராக பாடல் பாடியதற்காக தேச துரோக வழக்கில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். பாடகர் கோவனை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து மக்கள் அதி காரம் என்ற அமைப்பினர், மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் உட்பட 7 அமைப்பினர் சேர்ந்து தி.நகர் பேருந்து நிலையம் அருகே நேற்று காலையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தடையை மீறி போராட்டம் நடத்திய தாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்ய முற்பட்டனர். இதனால் போராட் டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட் டது. இதில் ஆத்திரம் அடைந்த போலீஸார் சிலரை தாக்கினர். பின்னர் அனைவரும் கைது செய் யப்பட்டு மாம்பலம் அருகே ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்ட னர்.