சாதி அடிப்படையில் வாக்கு சேகரிக்கும் திமுகவை புறக்கணிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் வேண்டுகோள்

சாதி அடிப்படையில் வாக்கு சேகரிக்கும் திமுகவை புறக்கணிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் வேண்டுகோள்
Updated on
1 min read

சாதி, மதங்களின் அடிப்படையில் மட்டுமே வாக்குகளை சேகரிக்கும் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.

கம்மா நாயுடு தெலுங்கு சங்கத்தினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் கம்மா நாயுடு தெலுங்கு சங்கத்தினர் பலர் பாஜகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியதாவது:

எந்த பிரச்சினைகளும் இன்றி தமிழகம் அமைதியாக இருக்கிறது. இதேபோல தமிழகம் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினால், அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

திமுகவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் தலைவர் ஆக முடியும். எந்த ஒரு அடிப்படை தொண்டரும் அங்கு தலைவர் ஆக முடியாது. ஆனால், பாஜகவில் சாதாரண அடிமட்ட தொண்டர்கூட தலைவர் ஆக முடியும்.

சாதி, மதங்களின் அடிப்படையில் மட்டுமே வாக்குகளை சேகரித்து வரும் திமுகவை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in