

கரோனா பரவல் மீண்டும் தீவிரமாகி வரும் நிலையில் தேர்தல் பரப்புரையும் உச்சத்தில் இருக்கிறது. இதற்காக கூடும் பெருங்கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் பாடாக இருக்கிறது.
கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங் களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வேட்பாளர்களும், தலைவர்களும் கூட்டத்தைக் கூட்டி தங்கள் பலத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்த கடந்த வாரத்தில் அழைத்து வரப்பட்ட மகளிரில் பெரும்பான்மையோர் கரோனா பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணியாமலேயே வந்திருந் தனர்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் வேட்பாளர்களுடன் செல்லும் பெண்களும் முகக் கவசம் அணியாமலேயே வீதிகளில் அணி வகுத்து வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் நடந்து சென்றனர்.
காவல்துறையினரும் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை.
தேர்தல் பணியில் தீயாய் வேலை செய்துகொண்டிருந்த கழக நிர்வாகியிடம், “கரோனா மீண்டும் பரவுதுன்னு சொல்றாங்க, கோயில்ல கூட திருவிழா நடத்தவும் அனுமதி இல்லைன்னு சொல்லிட்டாங்க! ஆனா இங்க இவ்வளவு கூட்டத்தில யாரும் முகக் கவசம் போட்ட மாதிரியே தெரியலையே!” என்ற போது, “தலைவரை காண வந்த சந்தோஷத்தில, அதெல்லாம் விட்டுட்டு வந்திருப்பாங்க; விடுங்க பாஸ்; இதைப் போய் பெருசா எடுத்துக்கிட்டு“ என்றனர்.