

மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் பா.சரவணனை ஆதரித்து நடிகை நமீதா கருப்பாயூரணியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மச்சான்ஸ்…… மதுரை வடக்கு தொகுதியில் டாக்டர் சரவணன், அதிமுக-பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். அவர் ரொம்ப நல்லவர். 350 பேருக்கு இலவசமாக சர்ஜரி செய்திருக்கிறார். அவருக்கு தாமரை சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள். அப்போதுதான் 6 சிலிண்டர்கள் இலவசமாகக் கிடைக்கும். அதில் பிரியாணி ஆக்கி சாப்பிடலாம். சாப்பிட என்னையும் கூப்பிடுங்கள், ஆனால் நான் வெஜிடேரியன். வாஷிங் மிஷின் கொடுக்கப் போறோம். இதனால் ஆண்கள் சந்தோஷப்படுவார்கள். அரசு வேலையும் கிடைக்கும். அதற்கு தாமரை சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.