

ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் து.குப்புராமை ஆதரித்து ஏப்.3-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்ய உள்ளார்.
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் து. குப்புராமை ஆதரித்து, பாஜகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே, மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே. சிங், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவரைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏப்ரல் 3-ம் தேதி ராமநாதபுரத்துக்கு வருகை தந்து, அரண்மனை பகுதியில் பாஜக வேட்பாளர் து.குப்புராமை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.