

இந்த தேர்தலில் புதிய ஆட்சியை உருவாக்குங்கள் என அமமுக மாநில கொள்கை பரப்பு செயலாளரும், நடிகை யுமான சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.
அவர் சிவகங்கையில் அத்தொகுதி அமமுக வேட்பாளர் அன்பரசனை ஆதரித்து பேசியதாவது: மக்கள் வரிப்பணத்தை கொள்ளை யடிக்கிறவர்களும் தேவையில்லை. மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் தனது குடும்பத்தை மட்டும் கவனிக்கிறவர்களும் தேவையில்லை.
வருகிற ஆட்சி டெண்டர் விட்டு கமிஷன் வாங்கும் ஆட்சியாக இருக்கக் கூடாது. திமுக, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். சிறையில் வாடும் 7 பேர் விடுதலை பற்றி கவலைப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால், அவர்களது குடும்பம் தான் சிறப்பாக இருக்கும்.கருணாநிதி இருந்தபோது அவரது அமைச்சரவையில் யார் யார் அமைச் சர்களாக இருந்தார்களோ, அவர்களே தான் மீண்டும் மீண்டும் வருகின்றனர். திமுகவில் சாதாரண தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதே இல்லை. இந்தத் தேர்தலில் புதிய ஆட்சியை உருவாக்குங்கள் என்று பேசினார்.