

அதிமுகவில் சட்டப்பேரவைத் தேர் தல் பணிகளைக் கவனிக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக தலைமை நியமித்தது. புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கரை நியமித்தது.
பெரும்பாலான அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்த நிலையில், சிவகங்கை அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கு பொறுப்பு வழங்காதது, அமைச்சர் ஆதரவாளர்களிடம் அப்போதே புகைச்சலை ஏற்படுத்தியது. மேலும் இந்த தேர்தலில் அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கே சீட் கிடைக்கவில்லை. இதனால் அவர் வேட்பாளருடன் பிரச்சாரத்துக்கு மட்டுமே சென்று வருகிறார்.
அவரைச் சந்திக்க வரும் நிர்வாகிகளிடம் எந்தக் குறையாக இருந்தாலும் வேட்பாளர் அல்லது தேர்தல் பொறுப்பாளரிடமே சொல்லுங்கள் என்றுகூறி நழுவி விடுகிறார். சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளரான அமைச்சர் விஜயபாஸ்கரோ, சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்ததில் இருந்து ஒருநாள் கூட தலைகாட்டவில்லை. அவர் இரு நாட்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்த முதல்வர் பழனிசாமியுடன் பெயருக்கு வந்து சென்றார்.
மேலும் அவர் தனது சொந்தத் தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையிலேயே முடங்கிவிட்டார். அவர் அங்கேயே தொடர்ந்து பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருவதால் சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களது மனக்குறைகளைச் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதேபோல் வெவ்வேறு மாவட் டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் சொந்த தொகுதிகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் அதிமுகவினர் விரக்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஜெயலலிதா இருந்தவரை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுபவர் தொகுதி முழுவதும் சுற்றி வந்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துவார். தேர்தல் பணிகளை ஒருங் கிணைப்பார். வேலை செய்யாத நிர் வாகிகளைக் கண்டிப்பார். ஆனால் தேர் தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட விஜயபாஸ்கர், சிவகங்கை மாவட்டத் துக்கே வரவில்லை. இதனால் தேர்தல் தொடர்பான உத்தி, குறைகளை யாரி டம் தெரிவிப்பது எனத் தெரியாமல் குழப் பத்தில் உள்ளோம்,’ என்றனர்.