Last Updated : 28 Mar, 2021 03:18 AM

 

Published : 28 Mar 2021 03:18 AM
Last Updated : 28 Mar 2021 03:18 AM

ஸ்ரீரங்கம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் உறுதி

ஸ்ரீரங்கம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

நீங்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் மக்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது? தொகுதி கள நிலவரம் எவ்வாறு உள்ளது?

அரசின் நலத்திட்ட உதவிகள் பெரும்பாலான மக்களுக்கு சென்ற டைந்துள்ளதால், பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக் கின்றனர். ஸ்ரீரங்கம் தொகுதி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பெருவாரியான தொகுதிகளில் அதிமுக வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் விடுத்த பிரதான முக்கிய கோரிக்கை என்ன?

நிறைய கோரிக்கைகளை மக்கள் என்னிடம் வைத்தனர். மணிகண்டத்தின் சில பகுதிகளி லும், மணப்பாறை பகுதிகளிலும் குடிநீர்ப் பிரச்சினை இருப்பதாகக் கூறினர்.

பராமரிப்பு சரியில்லாமலோ அல்லது குடிநீரை உந்தி அனுப் புவதிலோ ஏதேனும் இடையூறு இருக்கலாம். எனவே, குடிநீர்ப் பிரச்சினையைக் களைய தீர்க்க மான நடவடிக்கை எடுப்பேன்.

அடுத்ததாக, ஸ்ரீரங்கம் தொகு தியில் அடிமனைப் பிரச்சினை தான் தீர்க்கப்படாத, பிரதான மற்றும் நீண்ட நாள் பிரச்சினையாக உள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், நீதி மன்ற தீர்ப்புக்குப் பிறகு அதன டிப்படையில் உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்த நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?

அனைவரும் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அதிமுகக்காரன் என்ற பெருமி தத்துடனேயே அனைவரும் எனக்கு தேர்தல் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, இந்தத் தொகுதியில் உள்ள அனைத் துச் சமுதாயத்தினரும் நான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். இதுதான் எனக்கு கூடுதல் பலமாக உள்ளது.

கள்ளிக்குடி மத்திய வணிக வளாகம் பிரச்சினைக்கு என்ன தீர்வு வைத்துள்ளீர்கள்?

கள்ளிக்குடி வணிக வளாக விவகாரம் நீதிமன்றத்தில் உள் ளது. நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அரசு செயல்படுத்தும். அதேவேளையில், மணிகண்டம் பகுதியை திருச்சி மாவட்டத்தின் துணை நகரமாக்குவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளேன். அதன் மையப் பொருள் என்பது ஒரு நகரம் உருவாக வேண்டுமெனில் புதிய தொழிற்சாலை அமைக் கப்பட வேண்டும், புதிய தொழிற்கூடங்கள் உருவாக வேண்டும், புதிய குடியிருப்புகள் பெருக வேண்டும் என்பதுதான். அப்போது, மணிகண்டம் பகுதி இன்னும் கூடுதல் சிறப்புப் பெறும்.

தொகுதி மக்களுக்கு நீங்கள் அளித்துள்ள முக்கிய வாக்கு றுதிகள் என்னென்ன?

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம், அந்தநல்லூர் மற்றும் மணிகண்டம் ஒன்றியப் பகுதிகளில் ஏராளமான புதிய விரிவாக்கப் பகுதிகள் வந்துவிட்டன. அங்கு, போதிய குடிநீர் வசதி, கழிவுநீர் செல்லும் பாதை, சாலை வசதி உள்ளிட்டவை மேற் கொள்ளப்படும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் நோக்கில் அவர்களுடன் இணைந்து முன்னு ரிமை அடிப்படையில் அனைத் தையும் செய்ய வேண்டும்.

ஊரக உள்ளாட்சிகளுக்கு போதிய நிதி ஆதாரம் இருக்காது என்பதால், நகரத்தையொட்டிய ஊரகப் பகுதிகளில் சிறப்புத் திட்டத்தின் மூலம் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றித் தரப்படும். இதற்கான நிதி ஆதாரங்களைத் தேர்வு செய்து, நிதியைப் பெற்று பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பேன். இன்றைய தேவைக்கு என்றில்லாமல், தொலைநோக்குப் பார்வையுடன் தொகுதிக்குத் தேவையான திட்டங்களைச் செயல் படுத்தி ஸ்ரீரங்கம் தொகுதியை முன்மாதிரித் தொகுதியாக மாற்று வேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x