அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெறுவது திருவெறும்பூரில் நானே வெற்றி பெறுவதைப் போன்றது: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெறுவது, இத்தொகுதியில் நானே வெற்றி பெறுவதைப் போன்றது. எனவே, கட்சியினர் வீடு, வீடாகச் சென்று தீவிர பிரச் சாரத்தில் ஈடுபட வேண்டும். சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டுமெனில், இங்கே மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ ஆக வேண்டும். அதற்கேற்ப இத்தொகு தியில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பண மதிப்பு நீக்கம் கொண்டு வந்து, மக்களைப் பாடாய்படுத்தியதை மறந்துவிடக் கூடாது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழர்களின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் அடகுவைத்துவிட்டது. எனவே அதிமுக, பாஜக கூட்டணிக்கு இத்தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அளிக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருச்சியிலுள்ள துப்பாக்கி தொழிற் சாலை தனியார் மயமாக்குவது தடுத்து நிறுத்தப்படும். அரியமங் கலம் சர்வீஸ் சாலை பணிகள் துரிதப்படுத்தப்படும். அரியமங் கலம் குப்பை கிடங்கு மாற்றப்படும். கூத்தைப்பாரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். நவல் பட்டு ஐ.டி பார்க்கை விரிவாக்கம் செய்து, இப்பகுதி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப் படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in