காரைக்கால் மாவட்டத்தில் 95.04 சதவீதம் தபால் வாக்குகள் பதிவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டத்தில் 95.04 சதவீதம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஏப்.6-ம் தேதி நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில், விருப்பமுள்ள 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் தபால் வாக்குகள் அளிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, பதிவு செய்தோரில், 1,130 பேர் தபால் வாக்குகள் அளிக்க தகுதியுடையோராக கணக்கிடப்பட்டனர்.

நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று, 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகளை சேகரிக்க 20 குழுக்களும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரிடமிருந்து சேகரிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

கடந்த 25-ம் தேதி முதல் இன்று (மார்ச் 27) வரை வாக்குகளை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

"நெடுங்காடு (தனி) தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 113 பேர், மாற்றுத்திறனாளிகள் 82 பேர், கரோனா தொற்றாளர் 3 பேர் என198 பேர் வாக்களித்தனர்.

திருநள்ளாறு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 141 பேர், மாற்றுத்திறனாளிகள் 118 பேர், கரோனா தொற்றாளர் 6 பேர் என 265 பேர் வாக்களித்தனர்.

காரைக்கால் வடக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 109 பேர், மாற்றுத்திறனாளிகள் 76 பேர் என 185 பேர் வாக்களித்தனர்.

காரைக்கால் தெற்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 132 பேர், மாற்றுத்திறனாளிகள் 53 பேர், கரோனா தொற்றாளர் 3 பேர் என 188 பேர் வாக்களித்தனர்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 143 பேர், மாற்றுத்திறனாளிகள் 95 பேர் என 238 பேர் வாக்களித்தனர்.

மாவட்டத்தில் மொத்தம் 1,074 பேர் வாக்களித்துள்ளனர். இது 95.04 சதவீதமாகும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

5 தொகுதிகளிலும் சேகரிக்கப்பட்ட தபால் வாக்குகள், அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in