தஞ்சையில் மேலும் 2 பள்ளிகளில் 13 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்குக் கரோனா தொற்று

தஞ்சையில் மேலும் 2 பள்ளிகளில் 13 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்குக் கரோனா தொற்று
Updated on
1 min read

தஞ்சை மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளில் 13 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு முதன்முதலாக் கரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் கரோனா தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இதைத் தொடந்து மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இணைய வழியில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று கும்பகோணம் லிட்டில் ஃபிளவர் மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவர்கள் 1 ஆசிரியர் மற்றும் ஆடுதுறை ரைஸ்சிட்டி மேல்நிலைப் பள்ளியில் 7 மாணவர்களுக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 243 ஆக அதிகரித்துள்ளது. இதில் 120 மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கரோனா பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. கல்லூரிகளின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in