

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் நேற்று வாக்கு சேகரித்தார். பாஜகவை சேர்ந்த திரைப்பட நடிகை நமீதா, வானதி சீனிவாசனுடன் இணைந்து ராம்நகர் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
நமீதா பேசும்போது, ‘‘பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், இத்தொகுதி மக்களுக்காக சேவை செய்து வருகிறார். பிரதமர் மோடியின் திட்டங்களை கொண்டுசென்று மக்களிடம் சேர்த்துள்ளார். பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விக்கு நிதியுதவி செய்து வருகிறார். தமிழகம் கலாச்சாரமும், கடவுள் நம்பிக்கையும் உள்ள பூமி. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு எப்படி ஓட்டு போடுவது? இங்கேயே பிறந்து, உங்களுக்காக சேவை செய்யும் வானதி சீனிவாசனுக்கு வாக்களியுங்கள். அவர் வெற்றி பெற்றால், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் உங்களது வீடு தேடி வரும். கோவையில் தாமரை மலரும், தமிழ்நாடு வளரும்’’ என்றார். பிரச்சாரத்தின்போது, இளைஞர்களுடன் நடனமாடிய நமீதா, “மச்சான்ஸ்... தாமரைக்கு ஓட்டுப் போடுங்க” என்றார்.