புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகார சண்டை தான் காங்கிரஸின் சாதனை: என்ஆர் காங்., தலைவர் ரங்கசாமி விமர்சனம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி புதுப்பேட்டை பகுதியில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரச்சாரத்தை தொடங்கினார். படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி புதுப்பேட்டை பகுதியில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரச்சாரத்தை தொடங்கினார். படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகு திக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதி யில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று மாலை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்குள்ள மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து, கோயில் முன்பு பிரச்சாரம் செய்து பேசிய தாவது:

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகாலம் நடைபெற்ற ஒரு மோசமான காங்கிரஸ் ஆட்சியின் அவலநிலையை போக்கி, சிறந்த நல் லாட்சியை அமைத்திடுவதற்கான ஒரு தேர்தல் இது. 2016-ல் நல்லாட்சிகொடுப்பார்கள் என்று காங்கிரஸ்கூட்டணிக்கு மக்கள் வாக்களித் தனர். கடந்த ஆட்சியில் என்ன நன்மைகள் செய்தார்கள்?. மக்களுக்கான திட்டங்கள் ஏதாவது கொண்டு வந்தார்களா? புதுச்சேரியை வளர்ச்சி நோக்கி கொண்டு சென் றார்களா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தார்களா? புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்தார் களா? முதியோருக்கு உதவி செய்தார்களா? படிக்கின்ற பிள்ளைக ளுக்கு ஏதாவது நன்மை உண்டா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை உண்டா? யாருக்கும் எந்த பிர யோஜனமும் இல்லை.

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் புதுச்சேரி 10 ஆண்டுகள் பின்னுக்குசென்றுவிட்டது. வீட்டுக்கு ஒரு வருக்கு வேலை என வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், வேலையை விட்டு எடுத்தார்களே தவிர யாருக்கும் வேலை கொடுக்க வில்லை. அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை. கூட்டுறவு நிறுவனங்கள், பஞ் சாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடினார்கள்.

யாருக்கு அதிகாரம் என்ற சண்டையில், ஆளுநருக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் வரை சொல்லக்கூடிய நிலையை உருவாக்கியது தான் கடந்த ஆட்சியாளர்களின் சாதனை.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன உரிமை, அதிகாரம் இருக் கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது கடந்த ஆட்சிதான்.

ஒருபுறம் 85 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று கூறுவார்கள். மற்றொரு புறம் ஆளுநர், மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக் கிறது என்று கூறுவார்கள். கடந்தஆட்சியில் சண்டைதான் போட்டார் கள். எதையும் செய்யவில்லை.

மத்திய அரசோடு ஒரு இணக்க மான சூழலை உருவாக்கி, திட்டங்களை செயல்படுத்த நாம் ஆட்சியில்அமர வேண்டும். இதற்காக பாஜக, அதிமுக, பாமகவுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறோம். புதுச்சேரியை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது தான் என்ஆர் காங்கிரஸின் எண்ணம். என்ஆர் முதல்வராக வரு வாரா? என்று சிலர் கேள்வி கேட்பார்கள். நிச்சயமாக நான் முதல்வராக வருவேன். இந்த கூட்டணியின் தலைமை என்ஆர் காங்கிரஸ் தான். கூட்டணியின் தலைவரும் நான் தான். அதனால்ஆட்சியும் என்னுடைய தலைமை யில் தான். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in