

காளையார்கோவில் அருகே ராணுவ வீரரின் தாய், மனை வியைக் கொன்று 58 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒன்பது மாதங்களுக்குப் பின் 6 பேரை போலீஸார் கைது செய் தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபன் (32), லடாக்கில் பணியாற்றுகிறார். அவரது தந்தை சந்தியாகு (66) ஓய்வுபெற்ற ராணுவவீரர். தாயார் ராஜகுமாரி (61), மனைவி சினேகா (30), அவரது 6 மாத பெண் குழந்தையுடன் சொந்த ஊரில் வசித்தனர்.
கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி இரவு சந்தியாகு வெளியே சென்றிருந்தார். வீட்டில் சினேகாவும், அவரது குழந்தை, ராஜகுமாரி ஆகியோர் தூங்கினர். அதிகாலை 3 மணிக்கு அங்கு வந்த கொள்ளையர்கள் ராஜகுமாரி, சினேகாவை இரும்பு கம்பியால் தாக்கிக் கொன்றனர்.
பின்னர் இறந்தவர்கள் அணிந்திருந்த நகை, பீரோவில் இருந்த நகை என 58 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர். கொள்ளையர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக் கப்பட்டன.ஆனால், இந்த வழக்கில் சிசிடிவி, விரல்ரேகை ஆதாரங்கள் சிக்காததால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இது குறித்து சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் மக்களவையில் பேசி குற்றவாளிகளைப் பிடிக்க வலியுறுத்தினார். முதல்வர் பழனிசாமி உத்தரவில்,விசாரணை தீவிரமடைந்தது. போலீஸார் பழைய குற்ற வழக்குகளை ஆய்வு செய்ததில் கம்பியால் தாக்கி கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து தகவல் கிடைத்தது.
அதன்பின் குற்றவாளிகள் பயன்படுத்திய மொபைல் சிக்னல் மூலம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முத்துமுருகன், தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரைச் சேர்ந்த செல்லமுத்து, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த பூச்சிக்கண்ணன், காளையார்கோவில் அருகே பெரியகண்ணனூரைச் சேர்ந்த வேணுகோபால், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ராஜகோபாலகிருஷ்ணன், முகேஷ் ராஜா ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோ, பைக்கையும் பறிமுதல் செய்தனர். கொள்ளையர்கள் சிறையில் இருந்தபோது நண்பர் களாகி இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர்.