

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமாரை மீட்கக் கோரி, அவரது குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கொடைக்கானல் இயேசு சபையின் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவரது பெற்றோர் அந்தோணி - மரியதங்கம். ஓய்வு பெற்ற ஆசிரியர் கள். மரியதங்கம் இறந்துவிட்டார். மூத்தவர் அலெக்சிஸ் பிரேம் குமார். ஆல்பர்ட் மனோ கரன், எலிசபெத்ராணி, சகாய செல்வி, ஜான்ஜோசப் ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள்.
இதனிடையே, ஆப்கானிஸ் தானில் பாதிக்கப்பட்ட குடும்பங் களின் மறுவாழ்வு அளிக்கும் சேவையில் ஈடுபட்டிருந்த அலெக்சிஸ் பிரேம்குமார், திங்கள்கிழமை தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
இதையறிந்த அவரது குடும்பத் தினர் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்கக் கோரி செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அலெக்சிஸ் பிரேம்குமாரை பத்திரமாக மீட்டுத் தருமாறும், தற்போது பாதுகாப்பாக இருக் கிறாரா என்பதை அறிந்து தகவல் அளிக்குமாறும் அவர் கள் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டனர். தேவகோட்டை மறைமாநில இயேசு சபைத் தலைவர் தரப்பிலும் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மகனை எப்போது பார்ப்பேன்?
பாதிரியாரின் தந்தை அந்தோணி கூறுகையில், “இனி எனது மகனை எப்போது பார்ப் பேன்? தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட அவன் எப்படி இருக் கிறான் என்ற தகவலை விசாரித்து தயவுசெய்து எங் களுக்கு உடனுக்குடன் சொல் லுங்கள். நாளிதழ்கள், தொலைக் காட்சியைப் பார்த்துதான் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளமுடிகிறது எனக் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்தார்.
பாதிரியாரின் சகோதரர் ஆல்பர்ட் மனோகரன் தெரிவிக் கையில், கடந்த சனிக்கிழமை அலெக்சிஸ் என்னிடம் போனில் பேசினார். ஞாயிற்றுக்கிழமை எஸ்எம்எஸ் அனுப்பினார். திங்கள்கிழமை அவர் ஆப்கனில் கடத்தப்பட்டதாக தகவல் வந்தது. அவர் நலமுடன் நாடு திரும்ப வேண்டும் என்றார்.
பாதிரியாரின் சகோதரி சகாய செல்வி, என் அண்ணனை மீட்டுத் தாருங்கள். மத்திய, மாநில அரசுகள் என் அண்ணனை தீவிர வாதிகளிடம் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.